Saturday 18 September 2021

யுகம் - யுகங்களின் கணக்கு

யுகங்கள் - யுகங்களின் கணக்கு

யுகம் என்பது இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கால கணிப்பு முறையில், காலத்தை அளக்கும் அலகுகளில் ஒன்று. புராணங்களும் அவற்றின் வழிநூல்களும் யுகங்களையும், காலத்தையும் எவ்வாறு விளக்குகின்றன என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்:

தேவர்களின் பகல் = உத்திராயண காலம் 6 மாதம் - தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆணி.

தேவர்களின் இரவு = தக்ஷிணாயன காலம் 6 மாதம் - ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி.

உத்திராயண காலம் 6 மாதம் + தக்ஷிணாயன காலம் 6 மாதம் = 1 மனிதவருடம் = 1 தேவ நாள்.

360 மனித வருடங்கள் = 360 தேவ நாட்கள் = 1 தேவ வருடம்.

4800 தேவ வருடங்கள் = கிரேதாயுகம் = 17,28,000 ஆண்டுகள் (17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள்).

3600 தேவ வருடங்கள் = திரேதாயுகம் = 12,96,000 ஆண்டுகள் (12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள்).

2400 தேவ வருடங்கள் = துவாபரயுகம் = 8,64,000 ஆண்டுகள் (8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்).

1200 தேவ வருடங்கள் = கலியுகம் = 4,32,000 ஆண்டுகள் (4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்).

1 சதுர்யுகம் = கிரேதாயுகம் + திரேதாயுகம் + துவாபரயுகம் +  கலியுகம் = 43,20,000 வருடம் (43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள்).

1000 சதுர்யுகங்கள் = 1 மஹாயுகம் அல்லது 1 கல்பம் = பிரம்மாவின் 1 பகல் = 4,32,00,00,000 ஆண்டுகள் (432 கோடி ஆண்டுகள்).

2 கல்பங்கள் = பிரம்மாவின் 1 நாள் = 8,64,00,00,000 ஆண்டுகள் (864 கோடி ஆண்டுகள்).

360 பிரம்ம நாட்கள் =  1 பிரம்ம வருடம் = 31,10,40,00,00,000 ஆண்டுகள் (3 லட்சத்து 11 ஆயிரத்து 40 கோடி ஆண்டுகள்).

100 பிரம்ம வருடங்கள் = 1 பிரம்மாவின் ஆயுட்காலம் = 31,10,40,00,00,00,000 ஆண்டுகள் (3 கோடியே 11 லட்சத்து 4 ஆயிரம் கோடி ஆண்டுகள்).

1 கோடி பிரம்ம ஆயுட்காலங்கள் = விஷ்ணுவின் 1 பகல் = 3,11,04,00,00,00,00,00,00,00,000 ஆண்டுகள் (3 கோடியே 11 லட்சத்து 4 ஆயிரம் கோடி கோடி ஆண்டுகள்).

2 கோடி பிரம்ம ஆயுட்காலங்கள் = விஷ்ணுவின் 1 நாள் = 6,22,08,00,00,00,00,00,00,00,000 (6 கோடியே 22 லட்சத்து 8 ஆயிரம் கோடி கோடி ஆண்டுகள்).

360  விஷ்ணு நாட்கள் = 1 விஷ்ணு வருடம் = 22,39,48,80,00,00,00,00,00,00,00,000 ஆண்டுகள் (2 ஆயிரத்து 239 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரம் கோடி கோடி ஆண்டுகள்).

100 விஷ்ணு வருடங்கள் = 1 விஷ்ணுவின் ஆயுட்காலம் = 22,39,48,80,00,00,00,00,00,00,00,00,000 ஆண்டுகள் (2 லட்சத்து 23 ஆயிரத்து 948 கோடியே 80 லட்சம் கோடி கோடி ஆண்டுகள்).

1 கோடி விஷ்ணுவின் ஆயுள் = 2,23,94,88,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 ஆண்டுகள் (2 லட்சத்து 23 ஆயிரத்து 948 கோடியே 80 லட்சம் கோடி கோடி கோடி ஆண்டுகள்) = சிவபெருமானுக்கு கண் இமைக்கும் நேரம்.

திருநாவுக்கரசர் தனது தேவாரப் பாடல் வரிகளில் ஈசனின் வயது என்ன என்ற இரகசியத்தை போகிற போக்கில் இப்படி சொல்கிறார்:

'நூறு கோடி பிரமகர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்கனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறி லாவன் ஈசன் ஒருவனே'

1 comment:

  1. I really like this blog information, it is very useful content posting. Thank you very much for sharing on Google Safe Search Browsing. Know about Petron Thermoplast.

    ReplyDelete