Tuesday 17 September 2019

Perumal Malai, Erayamangalam

Ilaiya Perumal Malai, Erayamangalam


இளைய பெருமாள் மலை, இறையமங்கலம் :

 

இளைய பெருமாள் மலை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், காவிரி ஆற்றின் வடகரையில், இறையமங்கலம் என்னும் ஊரின் அருகில் கோரகுட்டையில் அமைந்துள்ளது.
 

இளையபெருமாள் மலை திருசெங்கோட்டிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


இளைய பெருமாள் மலையில் அமைந்துள்ள திருத்தலத்தின் இறைவனின் திருநாமம் பிரசன்ன வெங்கடரமன மூர்த்தி. இங்குள்ள பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் இளைய பெருமாள் என்னும் திருநாமத்துடன் கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய பரிவார தெய்வங்களுடன் அருள்பாலிக்கிறார்.


இந்த திருத்தலத்தின் இறைவனை தரிசிப்பதற்கு 600 படிகள் ஏறி செல்ல வேண்டும்.


மலை மீது ஏறி செல்வதற்கு ஏற்றார் போல், பெரும் பொருள் செலவில் வெகு நேர்த்தியாக படிகள் அமைக்கப்பட்டுள்ளது மட்டுமில்லாமல், இறைவனை தரிசிக்க வரும் பக்தர்கள் களைப்பின்றி வர ஏற்றார் போல் மலை அடிவாரத்திலிருந்து மேலே செல்லும் வரை அஸ்பெஸ்டாஸ் ஷெட்டும், பக்தர்கள் ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாறி சென்று இறைவனை தரிசிக்க ஏற்றாற்போல், இறைவனினின் அவதார பெருமைகளை  பறைசாற்றும் சிறு சிறு மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளது.





கொரோனா காலம் என்பதால், மிகவும் புண்ணியம் தரும் இந்த திருத்தலத்தின் மலை அடிவாரம் வரை வந்து விட்டு செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தலத்திற்கு சொந்த வாகனம் இல்லாது வரும் பக்தர்கள், திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்திலிருந்து இறையமங்கலம் செல்லும் பேருந்துகளை பிடித்து வந்து இறை தரிசனம் காணலாம். திருச்செங்கோட்டிலிருந்து இறையமங்கலத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே உள்ளது. சொந்த வாகனமில்லாமல் பேருந்துகளில் வரும் பக்தர்கள் மலையடிவாரத்தை அடைய இறையமங்கலத்திலிருந்து நேராக வடக்கு செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து வர வேண்டும்.

இனிதே இத்திருத்தலம் வந்து இளைய பெருமாளை தரிசித்து பேரருள் பெறுவீர்களாக. 




No comments:

Post a Comment